ஆயிரமாண்டு காலமா பம்பை, உடுக்கை, தாரை, தப்பட்டை,மேளம், என ஏகப்பட்ட மேளக்கருவிகளும் தாளக்கருவிகளும் தோலிலே செய்து பயன்படுத்தி வந்த நாட்டிலே வந்து ஒரு அல்லைக்கை முண்டம் பொத்தகம் போடுகிறது என்னவென்று? இந்து மதம் அல்லாத குறிப்பிட்ட மத முறைப்படி உயிருடன் இருக்கும் மாட்டை கழுத்தை வெட்டி ரத்ததை வெளியேற்றி அந்த தோலை உரித்து மிருதங்கம் செய்தால் தான் மிருதங்கத்திலே சவுண்டு வருமாம்.
இதை நம்பவும் ஒரு கூட்டம். அதை அப்படியே வாந்தி எடுப்பதற்கு சோ கால்டு அறிவு சீவிகள்.
இந்த விஷயம் பொய் என சொல்றதுக்கு சில கேள்விகள் போதும்.
முதல்ல இப்படி செஞ்சாத்தான் மிருதங்கத்துக்கு தோல் நல்லாவரும் என ஏதேனும் அறிவியல் ஆராய்ச்சிகள் உண்டா?
தானாகவே செத்த மாட்டுத்தோலை போட்டா வராதுன்னு உண்டா?
ஏன் இந்த கேள்வின்னா இந்த அல்லைக்கை மொண்டமோ அறீவியல் சயின்டிபிக் டெம்பர் என பீத்திக்குது. அப்படீன்னா என்ன செஞ்சிருக்கனும்?
சென்னையிலே மத்திய தோல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகழகம் இருக்கிறது. அங்கே போய் அங்கே ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளை சந்தித்து இப்படி தோலை உறித்தால் தான் மிருதங்கம் செய்ய முடியுமா? சும்மா செய்ய முடியாதா? தோல் பதனிடும் முறைகள் என்ன என கேட்டிருக்கவேண்டும்?
அதையும் இவர்கள் செய்யும் முறையும் ஒப்பிட்டு பார்த்து எழுதியிருக்கவேண்டும். அங்கேயும் இப்படித்தான் வெட்டுகிறார்களா? அங்கே என்ன சாதியினர் செய்கிறார்கள் என பார்த்திருக்கவேண்டும்.
சரி வேண்டாம்
வேறு வகையான தோல் கருவிகளாக தப்பட்டை, உடுக்கை, பம்பை போன்றவை எப்படி செய்யப்படுகின்றன அதுக்கு என்ன தோல் தேவை அது எப்படி எடுக்கப்படுகிறது என தேடி அதை ஒப்பிட்டு பார்த்திருக்கவேண்டும்.
மிருதங்கத்துக்கு வார் பிடிக்கவேண்டுமென்றால் தப்பட்டைக்கு சூடேற்றவேண்டும் உடுக்கைக்கோ அடிக்கும்போதே அந்த வாரை இயக்கவேண்டும் இதனால் தான் உடுக்கை அடிப்பது சிரமம். எல்லாராலும் உடுக்கை அடித்து நல்ல இசை எழுப்ப முடியாது. இப்படி ஏதேனும் ஒப்பீடு செய்து எழுதியிருக்கவேண்டும்.
சரி இது வேண்டாம் இது மிருதங்கம் பற்றி புத்தகம் என்றால் சரி மற்ற இடங்களிலே மற்ற மாநிலங்களிலே எப்படி செய்கிறார்கள்? வடக்கே தபலா உட்பட கருவிகள் எப்படி செய்கிறார்கள் என்றாவது எழுதியிருக்கவேண்டும்.
இது எதுவும் கிடையாது.
ஒரு பாப்பானிய குடும்பம் ஒரு தாழ்த்தப்பட்ட அதுவும் வேற்று மதத்தை சேர்ந்த குடும்பத்திடம் மிருதங்கம் வாங்கியதாம். இதை வைத்து ஏ பாப்பான்களே நீங்கள் எல்லாம் குறிப்பிட்ட மத முறைப்படி வெட்டப்பட்ட மாட்டுத்தோலைத்தான் தினமும் தொட்டுக்கொண்டிருக்கிறீர்கள் இதை ஒரு இருக்கறதிலேயே ஒரே ஒரு யோக்கியமான பார்ப்பான் நான் சொல்கிறேன் என பொத்தகம் எழுதிவிட்டதாம்.
அதிலேயும் தோலை தொடுவது இந்துக்களுக்கு பாபம் என்று வேறு எழுதியிருக்கிறதாம்.
இதுகள் எல்லாம் கோவிலுக்கு போனதுகளா? புராணங்களை படித்ததுகளா என தெரியவில்லை.
விட்டால் புலித்தோல் அணிந்து யானைத்தோலை போர்த்தி காட்சியளிக்கும் நம்பெருமானையே இந்து மதத்திலே இருந்து தள்ளி வைச்சிடும்கள் போலியே?
தானாக இறந்த விலங்குகளிலே இருந்து தோல் பொருட்கள் செய்வது என்றைக்கும் விலக்கப்பட்டதல்ல. மான்தோலாசனம் புலித்தோலாசனம் எல்லாம் எப்போதும் உண்டு.
கேரளாவிலே தோல் பொருட்களால் இசை வாசிக்கும் சாதியினர் அம்பலத்தார் என அழைக்கப்பட்டு கோவிலுக்குள்ளே மேடையேறி இசைப்பார்கள். தமிழ்நாட்டிலே ஏது அது நடக்கவில்லை ஏன் பறை இசையை விட்டுவிட்டு மேளம் என போனார்கள் என எழுதியிருந்தேன்.
விலங்குகளிலே மனிதர்களுக்கு அடுத்து இருக்கும் விலங்குகள் எப்போதும் இறைச்சிக்கு கொல்லப்பட்டதில்லை.
தன்னோடு கூட உழைக்கும் மாட்டிற்கும் தொழிலாளர் உரிமையை வழங்கி பென்சன் போல வயதானாலும் பராமரித்த நாடு இது. இங்கே வந்து எழுதுகிறதுகள் மாட்டை தொட்டால் பாபம் என.
இப்போது நமக்கோ வழியில்லை எழுத ஆளில்லை போட பணமில்லை என்பதால் இந்த அல்லைக்கை முண்டங்கள் எல்லாம் வாய்க்கு வந்ததை வரலாறு என எழுதி குவிக்கின்றன.
என்ன நடந்திருக்கும்? பரம்பரையாக மிருதங்கம் செய்யும் சாதி ஏதோ ஒரு காரணமாக மதம் மாறியிருக்கும் அதுவும் இரண்டு முறை மாறியிருக்கலாம். எனவே எப்படி வெட்டினாலும் அவர்கள் முறைப்படிதான் வெட்டவேண்டும் என்பது அப்படியே தொடர்ந்திருக்கலாம். யாகத்துக்கு பூனை கட்டின கதையா இது என்ன ஏதுன்னு தெரியாமலே பின்வரும் சந்ததியினர் தொடர்ந்திருக்கலாம்.
இன்றைக்கு அது அப்படி செய்தால் தான் மிருதங்கம் செய்ய முடியும் என ஆகிவிட்டது என அல்லைக்கை முண்டங்கள் ஆராய்ச்சி எழுதும் அளவுக்கு ஆகிவிட்டது.

Comments

Popular posts from this blog